Ashburton இல் இன்று அதிகாலை இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் Withells வீதி மற்றும் Rangitata நெடுஞ்சாலை சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர்‌.