கேப்ரியல் சூறாவளியால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து மக்களுக்கு, உதவி செய்ய விரும்புவோர் பணம் அல்லது பொருட்களை நன்கொடையாக வழங்கலாம்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் வழங்கும் சில இடங்கள் இங்கே உள்ளன.

*ரெட் கிராஸ் நியூசிலாந்து பேரிடர் நிதி

நியூசிலாந்து செஞ்சிலுவைச் சங்கக் குழுக்கள் நாட்டின் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கிய உதவிகளை வழங்குவதற்காகச் செயல்பட்டு வருகின்றன. நன்கொடைகள் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நாம் எதிர்கொள்ளும் அவசரநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவும்.

*மேயர் நிவாரண நிதி
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன, அவை தயாரானதும் லிங்க் மூலம் வெளியிடப்படும், சேகரிக்கப்படும் பணம் தூய்மைப்படுத்துதல் மற்றும் மீட்பு முயற்சிகள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஆதரவுக்காக பயன்படுத்தப்படும்.


*iwi நிதி திரட்டுதல்
சூறாவளியால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில், உள்ளூர் iwi தங்கள் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்கும் நிதி திரட்டல்களை அமைத்துள்ளது.

*Helping You Help Animals (HUHA)
சூறாவளியால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உதவ, வடக்கு தீவைச் சுற்றி இடம்பெயர்ந்த விலங்குகளைப் பராமரிக்கும் Helping You Help Animals என்ற தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்கவும். 3 டொலர்கள் உடனடி நன்கொடை வழங்க, HUHA என டைப் செய்து 4463 க்கு மெசேஜ் செய்யவும்.

*ஆக்லாந்து சிட்டி மிஷன்
Vodafone and Te Rourou மற்றும் Vodafone Aotearoa Foundation ஆகிய இரண்டும் தலா 35,000 டொலர்கள் வரை நன்கொடைகளை வழங்க வெள்ள நிவாரண நிதியை அமைத்துள்ளது. இதில் உணவு நன்கொடைகளையும் மிஷன் ஏற்றுக்கொள்கிறது. உதவிகளை வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள். https://givealittle.co.nz/fundraiser/support-auckland-city-mission-flood-relief

*Orange sky
ஆக்லாந்தை தளமாகக் கொண்ட இந்த மொபைல் laundry மற்றும் ஷவர் சேவையானது சோப்பு, ஷாம்பு மற்றும் பற்பசை போன்ற பொருட்களை நன்கொடையாக வரவேற்கிறது. பணத்தையும் இங்கு நன்கொடையாக அளிக்கலாம்.  https://give.orangesky.org.nz/donate

*Tamaki Donation இயக்கம்
Hawke's Bay சமூகங்களுக்கான நன்கொடை இயக்கம் Māngere, 253 Buckland சாலையில் உள்ள ஸ்டிரைவ் சமூக அறக்கட்டளையில் இன்று நடைபெறுகிறது. இதில் பேபி ஃபார்முலா, பால் பவுடர், நாப்கின்கள், துடைப்பான்கள், கேஸ் பர்னர்கள், ஆடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்,  குழந்தைகளுக்கான சுகாதார பொருட்கள், சுத்தமான போர்வைகள், தூங்கும் பைகள் மற்றும் முகாம் கியர் ஆகியவற்றை நன்கொடையாக அவர்கள் தேடுகின்றனர்.

*தன்னார்வத் தொண்டு
நன்கொடை அளிக்க நேரம் உள்ளவர்களுக்கு, நாடு முழுவதும் பல தன்னார்வ சேவைகள் இயங்கி வருகின்றன.
சில தன்னார்வ உள்ளூர் நிறுவனங்களுக்கான இணைப்புகள் இங்கே:

Volunteering Hawke's Bay
https://volunteeringhb.org.nz/volunteers/emergency-volunteering?fbclid=IwAR2mD3Sm0zNoeYCVoxT8GoDAbYB1BneFI0lD2UvE4T8SOPQaZ_xnUGIVcO4

Volunteering Northland
https://volunteeringnorthland.nz/?fbclid=IwAR3LNUGk6gAFypYOtJRamYe1YWiK06iVI8si3qmcAKNgcRnE07a_kWWZJyg

Volunteering Bay of Plenty
https://www.facebook.com/VolunteeringBOP/

Volunteering Auckland
https://www.facebook.com/VolunteeringAKL

Volunteering Waikato
https://volunteeringwaikato.org.nz/

Student Volunteer Army
https://sva.org.nz/